சர் தியாகராயா கல்லூரி
சர் தியாகராயா கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள கல்லூரி ஆகும். இந்த கல்லூரியானது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இங்கு கலை மற்றும் அறிவியல் படிப்புகளாக பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளாதாரம், பி.எஸ்சி வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், பி.காம் பொது, எம்.ஏ வரலாறு, எம்.ஏ பொருளாதாரம், எம்.எஸ்சி விலங்கியல், முனைவர் பட்டப் படிப்பு முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக வரலாறு, பொருளாதாரம், விலங்கியல். சுயநிதியில் இளங்கலைப் பாடங்களாக பிசிஏ, பிபிஏ பிஎஸ்சி கணினி அறிவியல், பி. காம் பொது, பி.காம் கணினி பயன்பாடு, பி.காம் கணக்கியல் மற்றும் நிதி, மற்றும் பி. காம் மெருவணிக செயலாளர். முதுகலைப் படிப்புகளானது 2019-2020 கல்வியாண்டில் தொடங்கப்பட்டு கீழ்கண்ட பாடங்களான எம்.எஸ்சி, கணினி அறிவியல், எம்.காம் (பொது) ஆகியவை வழங்கப்படுகின்றன.

